சரியான பார்வைக்கான மதிப்பீடு

சாதரணமாக ஒருவருக்கு கண்கள் இரண்டுமே நேராக இருப்பதோடுஇ இரண்டு கண்களுமே ஒன்றாகவே வெவ்வேறு திசைகளில் அசையக ; கூடியதாகவிருக்கும். ஆனால் பல்வேறு திசைகளிலும் இரண்டு கண்களையூம் ஒன்றாக அசைப்பதில் பலருக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். கண்கள் நேராகப் பார்க்கையிலும் கூட அவ்வாறான பிரச்சினைகள் அவர்களுக்கு எழலாம். இந்நிலைமை தமிழில் வாக்குக் கண் அல்லது மாறு கண் எனப்படுகின்றது.

வாக்குக்; கண் நிலைமையானது பார்வைக் கோளாறுகளுக்கு வித்திடுவதோடு முப்பரிமாணப் பார்வைஇ முக அழகினைக் குறைக்கின்ற நிலைமைகளுக்கு வித்திடலாம்.எனவே மிகச் சிறிய வயதிலேயே அவற்றினைச் சரியாகக் கண்டறிந்து அவற்றுக்கான சாத்தியமான திருத்தங்களைச் செய்வதவசியம். இவ்வாறான கண் நிலைமைகள் கொண்டவர் செய்யவேண்டிய சரியான கண் மதீப்பீட்டுப் பரிசோதனைகளின் தொகுப்பே ழுசவாழவiஉ யளளநளளஅநவெ எனப்படுகின்றது.

சரியான கண்பார்வை மதிப்பிடலில் உள்ளடக்கப்பட்டுள்ள நடைமுறைகளிற் சில கீழே தரப்பட்டுள்ளன.

ஒளிமுறிவூ (refraction)

கண் பரிசோதனையின் ஆரம்ப கட்ட நடைமுறையாகஇ பார்வைப் பிரச்சினைக்கான வில்லையின் வலுவினைச் சோதிக்கும் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. இப்பரிசோதனைக்கு தற்போது உபயோகிக்கும் மூக்குக் கண்ணாடிக்கான மருத்துவ பரிந்துரை மற்றும ; கடந்த கால மருத்துவ பதிவூகள் என்பனவூம் அவசியமாகின்றன. இப்பரிசோதனை 15 நிமிட நேரம் நீடிக்கின்றது.

மேலதிக கண்தசை பரிசோதனை

சில சமயங்களில் உங்கள் இரண்டு கண்களின் தசைகளும் ஒன்றாக இயங்காமல் இருக்கக் கூடும். அதனை மதிப்பிடுவதற்கான செயன்முறையே இதுவாகும்.
கண்களின் வேறுபாட்டினைக் கண்டறியூம் பரிசோதனை ( Cover Test)
கண்ணசைவூகளிலான சில வேறுபாடுகள்இ கண்கள் திறந்த நிலையிலும் மூடப்பட்ட நிலையிலும் கண்டறியப்படலாம். கண்களை மறைப்பதன் மூலம் இவ்வேறுபாடு கண்றியப்படலாம்.

ஒன்றிணைவூச்சோதனை (Convergence test)

சிலருக்கு கிட்டிய தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் நீண்டகால சிக்கல்கள் இருக்கக் கூடும். இச்சோதனையானது உங்கள் கண்களின் ஒன்றிணைவூத் தன்மையினைப் பரிசோதிக்கப் பயன்படும்.
Streoacuity பரிசோதனை

சிலர் மாடிப்படிகளை ஏறிச்செல்வதில்இ வீதியில் நடப்பதில் மற்றும் விளையாட்டுக்களின் போது பந்துகளைப் பிடிப்பதில் கஷ்டங்களை எதிர்கொள்வர்;. முப்பரிமாணப் பார்வையில் ஏற்படும் பலவீனமே அதற்குக் காணமாகும். இப்பரிசோதனையானது உங்கள் இரண்டு கண்களினதும் முப்பரிமாண மட்;டத்தினை அளவிடுவதற்காகும்.

அரியத்தின் மூலம் கண் மூடல் பரிசோதனை ( Prism cover test)

இப் பரிசோதனையானது வாக்குக்; கண்ணைக் குணப்படுத்த தேவையான வலுவினை மதிப்பிடுகின்றது.