செயற்கைக் கண்கள்

ஏதாவது காயங்களாலோ அல்லது நோய்களாலோ ஒரு கண்ணை இழந்தவர்களுக்கு அவர்களது முகத்தின் தோற்றத்தினை மேம்படுத்த செயற்கையாகப் பொருத்தப்படுவதே செயற்கைக் கண் எனப்படுகின்றது. இது பொதுவாக “பொய்க் கண்” அல்லது “செயற்கைக் கண்” எனப்படுகின்றது. செயற்கைக் கண்கள் இரண்டு பிரதான பிரிவூகளைக்; கொண்டுள்ளன.

 1. விழிவெண்கோளத்தினைச் சுற்றியூள்ள தோலை விளக்கும் பாரிய வெள்ளை நிறப்பகுதி
 2. கண்மணி மற்றும் கருவழி வட்டத்தின் மீது கபில நிறப் புள்ளி
  1. பெயரிடலுடன் செயற்கைக் கண்

   கண்ணில் ஏற்படும் சிக்கலான காயங்கள் அல்லது கண்நோய்கள்இ என்பனவற்றின்போது மென்மேலும் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் கண்கள் அகற்றப்படலாம். அதன் பின்னர் உங்கள் முகத்தோற்றத்தினைப் பேணுவதற்கும்இ கண்மடலின் செயற்பாட்டினைப் பேணுவதற்கும் அனேகமாக எப்போதும் செயற்கை வில்லை பொருத்தப்படுவது பரிந்துரைக்கப்படுகின்றது. கண்மணியூள்ள பகுதியானது செயற்கைக்;; கண்ணினால் நிரப்பப்படுகின்றது.

   பெயரிடலுடன் செயற்கைக்; கண்

   கண்கள் அகற்றப்படுவதற்கான காரணங்கள் சிலஇ

   • கண்களில் ஏற்படும் காயங்கள் – Eye injury
   • கண் அழுத்த நோய்
   • கடுமையான கண் தொற்றுக்கள்
   • கண்களில் ஏற்படும் கட்டிகள்

   கண்களை அகற்வதற்குரிய சத்திரசிகிச்சை வகைகள் எவை?

   பாதிக்கப்பட்ட கண்களை அகற்றுவதற்கு இரண்டு வகையான சத்திரசிகிச்கைள் வழக்கில் உள்ளன. இச்சத்திரசிகிச்சையின் வகைகளைப் பொறுத்தே செயற்கைக் கண்ணும் தெரிவூசெய்யப்படுகின்றது. இரண்டு வகையான சத்திர சிகிச்சைகளாவன

   1. உள்ளுறுப்பகற்றம்

   கண்களின் முற்பகுதி வெட்டப்படுவதன் மூலம்இ ஜெலி போன்ற பகுதி உட்பட கண்களின் வெளிப்புறப்பகுதிகள் அகற்றப்படுகின்றன.

   1. தோண்டி எடுத்தல்

   கண்விழி முழுவதும் ( பூகோளம் போன்ற அமைப்பு) கண்குழியில் இருந்து நீக்கப்படுகின்றது

   உங்களுக்கு எந்த முறை பொருத்தமானது என்பதனை மருத்துவர் தீர்மானிப்பார். அது உங்கள் கண்ணினது தன்மையிலும்இ கண்ணில் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத் தன்மையிலும் தங்கியூள்ளது.

   நான் ஏன் செயற்கைக் கண்களைப் பொருத்த வேண்டும்?

   செயற்கைக் கண்களால் கண்ணின் பார்வையைத் திரும்பப் பெற முடியாது. உண்மையான கண்கள் அகற்றப்பட்டுஇ செயற்கைக் கண்கள் பொருத்தப்பட்ட பின்னர் அந்நபருக்கு அக்கண்களில் பார்வை கிடைக்காது.

   பாதிக்கப்பட்ட கண் குழியின் தோற்றத்தினை செயற்கைக் கண்கள் மேம்படுத்தலாம். அவ்வாறான நபரின் இருபுறங்களிலுமான முகத்தோற்றமும் ஒரேமாதிரியானதாகவே இருக்கும். வெளிப்புறத் தோற்றத்தில் இருந்து அதன் வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் அனேகர் கண்களில் கட்டுப்போடவோ அல்லது துணியொன்றினால் மறைப்பதனையோதான் விரும்புகின்றார்கள்.